பேட்ஸ்மேன்களுக்கு பெர்த் ஆடுகளம் உகந்ததல்ல. இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் தடுமாறி நிலைகுலைந்ததை நாம் பார்த்தோம். ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சுதாரித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வழிநடத்தி சென்றார் ஜெய்ஸ்வால் என்றே சொல்லலாம். அதனால் அவர் குறித்த பாராட்டுகள் கிரிக்கெட் உலகில் நிரம்பி வழிந்தன.
ஆனால் ஆஸி அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து பேசும்போது “எங்கு பார்த்தாலும் ஜெய்ஸ்வால் குறித்த பாராட்டுரைகளேக் காணப்படுகின்றன. ஆனால் கே எல் ராகுல்தான் பாராட்டுக்குரியவர். அவர் ஆடியது சிறந்த இன்னிங்ஸ். அதுதான் இந்தியாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த உதவியது.” எனக் கூறியுள்ளார்.