இந்தியா அணி ஆதிக்கம் – முதல்நாள் அப்டேட்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (17:37 IST)
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் நாள் முடிவில்  ரன்கள் சேர்ப்பு

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது

இன்று ராஜ்கோட்டில் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா இந்த போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களோடு களம் இறங்கியது.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரித்வி ஷாவும் புஜாராவும் களத்தில் நின்று விளையாடி ரன் வேட்டை நடத்தினார். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 134 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய புஜாரா 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ரஹானே இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. ரஹானே 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் அடித்தார்.

முதல்நாள் ஆட்டமுடிவில் 89 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்கள் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் ரன்ரேட் 4.09 ஆகும். கோலி 72 ரன்களோடும் ரிஷப் பாண்ட் 17 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிகள் சார்பில் கேப்ரியல், லெவிஸ், பிஷூ மற்றும் ச்சேஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்