4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலை!!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (08:46 IST)
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலை. 

 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்து உள்ளது. 
 
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு நேர இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 149 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதன் மூலம் இந்த போட்டியில் 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்