அதிகரிக்கும் கொரோனா.... கவலை அளிக்கிறது - பிராவோ வீடியோ வெளியீடு

Webdunia
சனி, 22 மே 2021 (21:28 IST)
தமிழழகத்தில் அதிகரித்து வரும் கோவிட் எனும் கொரொனா தொற்று குறித்து கவலை தெரிவித்துள்ளார் சென்னை கிங்ஸ் அணி வீரர்.

இன்று தமிழகத்தில் மேலும் 35, 873  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,06,861   பேராக அதிகரித்துள்ளது.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிங்ஸ் அணியின் வீரரும் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் வீர்ருமான  டிஜே பிராவோ தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழழகத்தில் அதிகரித்து வரும் கோவிட் எனும் கொரொனா தொற்று குறித்து கவலைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உலகெங்கும் பரவிவரும் கொரொனா தொற்று இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் அதிகளவு பாதித்து வருகிறது. இதுகுறித்து நான் கவலைப்படுகிறேன். இத்தொற்றிலிருந்து மீழ அனைவரும் மாநில அரசு கூறுவ்துபோல் முககவசம், சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியைக்  கடைபிடியுங்கள் எனத்தெரிவித்துள்ளார். மேலும் இந்த டுவீட்டை அவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலுனுக்கு டேக் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்