இன்று நடைபெற்று வந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் மிகவும் அபாரமாக தொடக்கத்தை கொடுத்தனர்
டூபிளஸ்சிஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 95 ரன்கள் எடுத்தார் என்பதும், ருத்ராஜ் 64 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி 8 பந்துகளில் 17 ரன்களும், மொயின் அலி 12 பந்துகளில் 25 ரன்களும், குவித்த நிலையில் ஜடேஜா தான் சந்தித்த முதல் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார்
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு 221 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியினர் ஆரம்பத்திலேயே தடுமாறினர். சென்னை அணியின் சாம் கர்ரன் பந்து வீச்சுகளை விளாசித்தள்ளி அதிரடி காட்டினார் கம்மின்ஸ். அவர் 22 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். எனவே சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
An absolute thriller here at The Wankhede as @ChennaiIPL clinch the game by 18 runs.