விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி 100 சதவீதம் உலகக் கோப்பைக்கு தயாராக இருந்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது.
சமீபத்தில் இதற்கான அட்டவணையை ஐசிஐசி வெளியிட்டது
இதன் படி அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி தொடங்க உள்ளது. கடைசி லீக் போட்டி நவம்பர் 12ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
முதல் செமி பைனல் நவம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது செமி பைனல் நவம்பர் 16ஆம் தேதி இறுதி போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி 100 சதவீதம் உலகக் கோப்பைக்கு தயாராக இருந்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
''இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதித்து வருகிறது. தேர்வு முறையில் தற்போது திணறி வருவதால்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 20 தொடரை இழந்தது.
உலகக் கோப்பையிலும் சீனியர் வீரர்களை நம்பித்தான் உள்ளது இந்திய அணி. விராட் கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால், உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி 100 சதவீதம் தயாராக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.