பங்களாதேஷில் நிலவும் பதற்றமான அரசியல் சூழல்… இந்தியாவுக்கு மாற்றப்படுகிறதா மகளிர் டி 20 உலகக் கோப்பை?

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (14:47 IST)
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் ஆளும் அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்து பதற்றமான சூழல் நிலவுகிறது.  அதனால் அந்நாட்டின் பிரதமரான ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதையடுத்து ராணுவம் பொறுப்பேற்று இடைக்கால ஆட்சி அமைப்பது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடக்க இருந்த மகளிர் கிரிக்கெட்டுக்கான டி 20 உலகக் கோப்பை தொடர் அங்கு நடக்குமா என்ற கேள்வி  ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பங்களாதேஷின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கவனித்து வரும் ஐசிசி, போட்டிகளை இந்தியாவுக்கு மாற்றலாமா எனவும் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் சில தினங்களில் எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்