அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியதால் 167 கோடி ரூபாய் இழப்பா?

vinoth

வெள்ளி, 19 ஜூலை 2024 (09:36 IST)
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடர் பரபரப்பான இறுதிப் போட்டியோடு நிறைவடைந்தது. இந்த இறுதி போட்டியில் வென்ற இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

கிரிக்கெட்டை அமெரிக்காவில் பிரபலப்படுத்த இந்த தொடரின் பெரும்பாலான லீக் போட்டிகள் அமெரிக்காவின் சில மைதானங்களில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ரன்கள் அடிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். அதனால் அந்த போட்டிகள் அனைத்தும் எந்தவித பரபரப்பும் இல்லாமல் மந்தமாக சென்றன. இதனால் இந்த போட்டிகளைக் காணவும் ரசிகர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. மைதானத்தின் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தன.

இந்நிலையில் அமெரிக்காவில் போட்டிகளை நடத்தியதால் ஐசிசிக்கு இந்திய மதிப்பில் 167 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்திய அணி கலந்துகொண்ட போட்டிகளைத் தவிர பிற போட்டிகளுக்கு ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் ஆதரவுக் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்