இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு ஐசிசி அபராதம்

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (18:55 IST)
மெதுவாக பந்து வீசியதற்காக போட்டிக்கான ஊதியத்தில் இருந்து இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.

இந்த நிலையில்,   இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர்  நேற்று  முதல்  (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.இதில், சூர்யகுமார் 21 ரன்னும்,  திலக் வர்மா 39 ரன்னும் அடித்தனர்.பின்னர் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது இந்தியா. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில், இப்போட்டியில், மெதுவாக பந்து வீசியதற்காக போட்டிக்கான ஊதியத்தில் இருந்து இந்திய அணிக்கு 5 சதவீதமும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 10 சதவீதமும் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்