X தளத்தில் எனக்கு அக்கவுண்ட் இல்லை- சாரா டெண்டுல்கர் விளக்கம்

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (17:19 IST)
கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தான் எக்ஸ் தளத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டில் வர்ணனையாளராகவும், இந்திய வீரர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் கூறி வருகிறார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் அர்ஜூன் டெண்டுல்கர்  ஐபில் கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது மகள் சாரா டெண்டுல்கர் பெயரில் உள்ள எக்ஸ் அக்கவுண்டரில் இருந்து சமீபகாலமாக பல சர்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்பட்டு வந்தன.

இதுகுறித்து  இன்று சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

அதில்,  எக்ஸ் தளத்தில் எனக்கு கணக்கு இல்லை. தனது பெயரில் இயங்கும் போலி கணக்குகளை பயன்படுத்தி பொதுமக்களை குழப்பி வருவதாக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்ப் வெளியிட்டுள்ளார்.

இந்த சாரா டெண்டுல்கர் பெயரில் இயங்கும் எக்ஸ் தள அக்கவுண்டிற்கு பணம் செல்த்தி புளூ பெற்றதாக சமீபத்தில் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்