சச்சின் சாதனையை சமன் செய்த கோலி! – சச்சினின் ரியாக்‌ஷன்!

ஞாயிறு, 5 நவம்பர் 2023 (19:06 IST)
இன்று நடைபெற்று வரும் இந்தியா – தென்னாப்பிரிக்கா உலக கோப்பை போட்டியில் தனது 49வது சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.



ஐசிசி உலக கோப்பை போட்டிகளின் இறுதி லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் ஆளாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி இன்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டு வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை குவித்தது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் வீழ்த்திய சச்சினின் (49) சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என கடந்த சில மேட்சுகளாக இருந்து வந்த எதிர்பார்ப்பு இந்த போட்டியில் பூர்த்தியாகியுள்ளது. இந்த போட்டியில் தனது 49வது சதத்தை அடித்து சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.

இதுகுறித்து வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின், மேலும் அடுத்த சில நாட்களில் நடைபெறும் உலக கோப்பை போட்டிகளிலேயே விராட் கோலி தனது அடுத்த சதத்தையும் அடித்து தனது சாதனையை முறியடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்