'தோனியுடன் ரோஹித் சர்மாவை ஒப்பிட்ட முன்னாள் வீரர்

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (20:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா ஒப்பிட்டுள்ளார் பிரபல வீரர் வீரர்.

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணியில் உள்ளது இந்திய அணி. தற்போது இந்தியாவில் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.

இதில், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி. எனவே இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ‘’ரோகித் எப்போதும் ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம். சீனியர், ஜூனியர் என பார்க்காமல் அனைவரருடன் கலகப்பான மன நிலையுடன் ப பேசுகிறார் என்று கேள்விப்பட்டேன். அவரது தலைமைப் பண்மை தோனியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்