உலகக்கோப்பை கிரிக்கெட்: தாமதமாக தொடங்கியதால் ஓவர் குறைப்பு.. எத்தனை ஓவர்கள்?

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (16:17 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது. 
 
இன்றைய போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானத்தில் திடீரென மழை பெய்ததன் காரணமாக போட்டி நான்கு மணிக்கு தான் தொடங்கியது. இதனால் இந்த போட்டி 43 ஓவர்கள் போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி இந்த போட்டியில் டாஸ் வென்ற நிலையில் அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது நெதர்லாந்து அணி சற்றுமுன் வரை மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
நெதர்லாந்து அணி ஏற்கனவே இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளதை அடுத்து இன்றைய போட்டியில்  வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்