மீண்டும் திருமணப் புகைப்படங்களை ரி ஸ்டோர் செய்த ஹர்திக் பாண்ட்யா மனைவி நடாஷா!

vinoth
திங்கள், 3 ஜூன் 2024 (15:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வட இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர். இருவரும் தாங்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்போது திடீரென நடாஷா தன்னுடைய கணவரோடு இருக்கும் புகைப்படங்களையும், தங்கள் திருமணப் புகைப்படங்களையும் மீண்டும் ரி ஸ்டோர் செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழப் போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்