அவர்தான் மாற்றத்தை உருவாக்கினார்… ஆஷிஷ் நெஹ்ராவை புகழ்ந்த ஹர்திக்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (09:15 IST)
இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார்.  இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொண்டு டி 20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவே முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

அதைப் பூர்த்தி செய்வது போல இலங்கை தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்திய அணி. இதையடுத்து ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தன் கேப்டன்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவைப் புகழ்ந்துள்ளார். அதில் “நாங்கள் இருவரும் வேறு வேறானவர்களாக இருந்தாலும்,  எங்கள் எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. அவர் என் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். கிரிக்கெட்டைப் பற்றிய விழிப்புணர்வை நான் நெஹ்ராவிடம் கற்றுக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்