ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

vinoth

திங்கள், 24 மார்ச் 2025 (13:38 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிரடியாக பேட்டிங் ஆடி 286 ரன்கள் சேர்த்து சாதனைப் படைத்தனர். அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் மற்றும் கிளாசன் ஆகிய நால்வரின் அதிரடியான ஆட்டத்தால் அந்த பந்துகள் நேராக பவுண்டரிக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன.

இது ஐபிஎல் தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த போட்டியில் மிகவும் அதிர்ச்சியான விஷயமாக அமைந்தது ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தை ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் பதம் பார்த்ததுதான். இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் கம்பேக் கொடுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வள்ளலாக மாறினார். இந்த இன்னிங்ஸில் 4 ஓவர்கள் வீசி ஆர்ச்சர் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் விட்டுக்கொடுத்த மிக அதிகபட்ச ரன்கள் என்ற மோசமான சாதனையை இதன் மூலம் ஆர்ச்சர் படைத்துள்ளார்.

இந்நிலையில் ஆர்ச்சரின் இந்த இன்னிங்ஸைக் கிண்டலடிக்கும் விதமாகப் பேசிய வர்ணனையாளரும் முன்னாள் இந்திய அணி வீரருமான ஹர்பஜன் சிங் “லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போலவே, ஜோஃப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாக உள்ளது.”எனப் பேசியுள்ளார். கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டு பேசியதற்கு தற்போது சமூகவலைதளங்களில் வலுவானக் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்