உள்ள வந்ததும் சிக்ஸ் அடிக்க கூடாது.. மெல்ல விளையாடணும்! – சஞ்சுவுக்கு கவாஸ்கர் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (09:08 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடிக்கு முயலக்கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை ராஜஸ்தான் வீழ்த்தியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பமே சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் “ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் களத்திற்குள் வந்ததுமே சிக்ஸ் அடிக்க முயல்வதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஷாட்டுகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். சில ரன்கள் ஓடி கால்கள் சரியாக நகர ஆரம்பித்த பின் அதிரடியாக விளையாட ஆரம்பிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்