“இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவதை நான் ஏற்பேனா?” – கம்பீர் அளித்த பதில்!

vinoth
திங்கள், 3 ஜூன் 2024 (07:41 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் இருப்பதாகவும், இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. பிசிசிஐ தரப்பில் இந்த முறை வெளிநாட்டு வீரர்கள் யாரும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்