“தோனியிடம் டெக்னிக் இல்லை…” சர்ச்சையில் சிக்கிய எமர்ஜிங் பிளேயர் விருது பெற்ற நிதிஷ்குமார்!

vinoth

திங்கள், 3 ஜூன் 2024 (07:29 IST)
இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரும் ஸ்டார் கிரிக்கெட்டரான எம்.எஸ்.தோனி அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டாலும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசந்தான் தோனிக்கு கடைசி சீசன் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்காக இந்த முறை கண்டிப்பாக சிஎஸ்கே கப் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிஎஸ்கே ப்ளே ஆஃப்க்கு கூட செல்லவில்லை.

இதனால் அடுத்த சீசனில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தோனி குறித்து இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரிடம் ஒரு வீரருக்கு திறமை முக்கியமா? அல்லது திறமை முக்கியமா?” எனக் கேட்ட போது ‘மனநிலைதான் முக்கியம்’ எனக் கூறி அதற்கு உதாரணமாக கோலி மற்றும் தோனியைப் பற்றி பேசினார்.

அதில் “தோனியிடம் திறமை இருக்கிறது. ஆனால் டெக்னிக் இல்லை. கோலி அளவுக்கு தோனியிடம் டெக்னிக் இல்லை” எனக் கூறினார். இந்த ஒப்பீடுதான் அவரை ரசிகர்கள் விமர்சிக்க காரணமாக அமைந்துள்ளது. அவர் தன்னுடைய பதிலுக்கு விளக்கம் அளித்து “நான் சொன்ன கருத்தை முழுமையாக படிக்காமல் கத்தரித்து போலி செய்திகளை பரப்ப வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்