இந்திய அணியில் மூன்று சதங்கள்.. போட்டியை டிரா ஆக்கிய மூவரணி.. ஸ்கோர் விவரங்கள்..!

Siva

திங்கள், 28 ஜூலை 2025 (07:47 IST)
கடந்த ஜூலை 23 அன்று தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சதம் அடித்ததால் டிராவில் முடிவடைந்தது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் 669 ரன்கள் குவித்து வலுவான முன்னிலை பெற்றது.
 
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியபோது, தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், கே.எல். ராகுல் அபாரமாக விளையாடி 90 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
 
அதன் பிறகே இந்திய அணியின் பேட்டிங்கில் மாயாஜாலம் தொடங்கியது. கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர். இதில் வாஷிங்டன் சுந்தரும் ஜடேஜாவும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்று, இந்திய அணியின் விக்கெட் சரிவை தடுத்து போட்டியை டிராவில் முடித்தனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்