பிரதமர் மோடி சமீபத்தில் 4,078 நாட்கள் பிரதமராக பதவி வகித்து, இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்தார். இதன்மூலம், ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு இரண்டாவது நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இப்போது அடுத்ததாக உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயக தலைவர் என்ற சர்வதேச அங்கீகாரமும் மோடிக்கு கிடைத்துள்ளதால் பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.