கோலியைக் காப்பி அடிக்கிறார் ஷுப்மன் கில்… முன்னாள் வீரர் விமர்சனம்!

vinoth

புதன், 23 ஜூலை 2025 (11:00 IST)
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், போட்டியை ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்து கோட்டை விடுகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோற்றுள்ளது.

இந்த தொடரின் மூலம் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷுப்மன் கில், ஆக்ரோஷமானக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதே நேரம் அவரின் பேட்டிங் செயல்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் வர்ணனையாளரும் முன்னாள் இந்திய வீரருமான மனோஜ் திவாரி, கில் கோலியைக் காப்பி அடிப்பதாக விமர்சித்துள்ளார்.

அதில் “கடந்த இங்கிலாந்து தொடரில் கோலி எப்படி நடந்துகொண்டாரோ, அதுபோலவே ஷுப்மன் கில் நடந்து கொள்கிறார். இதன் மூலம் அவர் எதை, யாருக்கு நிரூபிக்க நினைக்கிறார் என தெரியவில்லை. ஸ்டம்ப் மைக் காலத்தில் இப்போது வீரர்கள் பேசுவது அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது.  கில் பேசும் வார்த்தைகள் மற்றும் மொழி சரியில்லை.

அவர் இந்திய கிரிக்கெட்டை பிரதிநிதித்துவம் செய்கிறார். அதனால் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும். அவரது இயல்புக்கு மீறிய ஆக்ரோஷத்தை அவர் காட்டுவதால் பேட்டிங்கில் கவனம் சிதறுகிறது. அவர் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் அபாயம் உள்ளது.” என விமர்சித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்