இந்த தொடரில் இந்திய அணியில் ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஜெய்ஸ்வால், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்றவர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியின் பலத்தை நிரூபித்துள்ளனர். அதே போல இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடிய இரு அணி வீரர்களையும் இணைத்து சிறந்த அணியை இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். அதில் இந்திய வீரர்கள் ஆறு பேரும், இங்கிலாந்து வீரர்கள் ஐந்து பேரும் இடம்பிடித்துள்ளனர். ஆனால் இந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு அவர் இதில் இடம்தரவில்லை.
ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடரின் சிறந்த அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், ஓய்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜாஸ்ப்ரீத் பும்ரா, மொகம்மது சிராஜ்.