மளமளவென விழுந்த விக்கெட்கள்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் சேர்ப்பு!

vinoth

வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (11:12 IST)
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட்களை இழந்து 339 ரன்கள் சேர்த்தது.

முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்ப அஸ்வினும் ஜடேஜாவும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 85 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

அஸ்வின் 116 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். வங்கதேச தரப்பில் ஹசன் முகமது ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். டஸ்கின் அகமது 3 விக்கெட்களும் நஹித் ராணா மற்றும் ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் பங்களாதேஷ் 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்