பும்ராவிடம் கேப்டன்சியைக் கொடுங்கள்… கொந்தளுக்கும் இந்திய ரசிகர்கள்!

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (16:44 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது. இன்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள கேப்டன் ரோஹித் ஷர்மா “நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.  நியுசிலாந்து அணி எங்களை விட எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினர். நான் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சரியாக விளையாடவில்லை.  ஒரு அணியாக நாங்கள் சரியாக விளையாடத் தவறிவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

ஆனால் இந்த மோசமான தோல்வியை ஏற்க மறுத்துள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன்சியைப் பிடுங்கி பும்ராவிடம் ஒப்படைக்க வேண்டும் என விமர்சனங்களை வைக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீரின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்