போலி நிறுவனம் ஒன்று தன்னுடைய 4 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திர ஸ்ரீநாத் என்பவர் 'விக்ரம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். 40 சதவீத வட்டி தருவதாக ஆசைக்காட்டினார். இதனை நம்பி அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் விக்ரம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்சில் முதலீடு செய்தனர். விளையாட்டு நிரூபரும் ஸ்ரீநாத்தின் கூட்டாளியுமான சுரேஷ் என்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், சாய்னா நேவால் மற்றும் பிரகாஷ் படுகோன் ஆகியோரை போலி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தார். பிறகு அனைவரும் தலைமறைவாகினர்.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து ராகவேந்திர ஸ்ரீநாத், சுரேஷ், நரசிம்மமூர்த்தி, நாகராஜ், பிரகலாத் ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பெங்களூரு போலீசில் ராகுல் டிராவிட் அளித்த புகாரில், ராகவேந்திராவின் நிறுவனத்தில், 20 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். அதில் 16 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப வந்தது. பாக்கித் தொகையான 4 கோடி ரூபாயை மீட்டுத் தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.