கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

Prasanth Karthick

திங்கள், 24 மார்ச் 2025 (16:25 IST)

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்த சீசனிலாவது ஆர்சிபி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு ஒரே காரணம் விராட் கோலிதான்.

 

ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் இந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள அணியில் முக்கியமான அணியாக ஆர்சிபி உள்ளது. ஆனால் இதுவரையிலும் ஒருமுறை கூட அந்த அணி கோப்பை வெல்லாவிட்டாலும் ரசிகர்கள் தொடர்ந்து விராட் கோலிக்காக அந்த அணியின் ரசிகர்களாக உள்ளனர். இந்த 18வது ஐபிஎல்லில் ஆர்சிபி கோப்பை வெல்லும் முனைப்பில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து முன்னகர்ந்து வருகிறது.

 

இந்நிலையில் விராட் கோலி குறித்து பேசிய எம்.எஸ்.தோனி “விராட் கோலி அணியின் வெற்றிக்காக உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவருக்கும் 50-60 ரன்கள் எல்லாம் பத்தாது. எப்போது சதம் அடிக்க வேண்டும், அணியின் வெற்றிக்கு வழி செய்ய வேண்டும் என்றே நினைப்பார். இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து நின்று ஆட விரும்புவார்” என பேசியுள்ளார்.

 

தோனியின் இந்த கருத்து ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்