கர்நாடக மாநிலத்தில், அரசு பேருந்து டிரைவர் ஐபிஎல் மேட்சை பேருந்து ஓட்டிக்கொண்டே பார்த்த நிலையில், இது குறித்த வீடியோ வைரலானது. இதனை அடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தபோது, அரசு பேருந்து இயக்கிய டிரைவர் ஒருவர், பேருந்து ஓட்டிக்கொண்டே ஸ்டீரிங் அருகில் மொபைல் போனில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தார். இது குறித்து பயணிகள் அவரிடம் கேட்டபோது, அவர் பொறுப்பான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து, மேட்ச் பார்த்துக்கொண்டே பேருந்து ஓட்டிய காட்சியை பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். அந்த வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து, டிரைவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.