வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து அணி

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (23:26 IST)
வங்கதேசத்திற்கு எதிரான 2 வது ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதன்படி, 3 ஒருநாள் மற்றும் 3டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த நிலையில், முதல் ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் ஒருநால் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து  இன்று நடந்த 2 வது ஒருநாள் போட்டியில், இன்று இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை வென்றது.

இன்றைய போட்டியில், வங்கதேச அணி முதலில் பந்து வீசியது. எனவே முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. இதில்,50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது.

எனவே,327 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.

இதில்., 44.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது,. இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றது.

இங்கிலாந்து அணியில், ரஷீத், சாம்கரன் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்