ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 5- 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து, இரு அணிகளும் பங்கேற்கும் ஒரே ஒரு டி20 போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஜாஸ் பட்லர் 61 ரன்களும், அலேக்ஸ் ஹேல்ஸ் 49 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்வெப்சன் 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினர்.
222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 193 ரன்களுக்கு அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக ஆரோன் பிஞ்ச் 84 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 வீக்கெட்டுகளையும், அடில் ரஷீத் 3 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.