குல்தீப், சாகல் அபார பந்துவீச்சு: 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (07:04 IST)
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில் நடந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
 
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 208 ரன்கள் எடுத்தது,. ரோஹித் சர்மா 97 ரன்களும், தவான் 74 ரன்களும் எடுத்தனர். 
 
இதனையடுத்து 209 ரன்க்ள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷானோன் 60 ரன்கள் எடுத்தார். மேலும் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும் சாஹல் 3 விக்கெட்டுக்களையும் பும்ரா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்