இந்திய அணியை மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்ட தோனி, மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். இந்திய அணிக்கு தோனிக்கு முன்பு வரை நிலையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைக்கவில்லை. இதனால் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பொறுப்பை டிராவிட்டே ஏற்றார்.
தோனி வந்த பின்னர்தான் இந்திய அணியில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பான வீரர்கள் உருவாக ஆரம்பித்தனர். இதுபற்றி பேசியுள்ள டிராவிட் “தோனி வந்த பின்னர் அந்த நிலைமையே மாறியது. அதன் பிறகு விக்கெட் கீப்பிங்கில் மட்டும் திறமை வாய்ந்த கீப்பர்களின் தேவை இல்லாமல் போனது” எனக் கூறியுள்ளார்.