’தல ‘தோனி ஏலத்தில் கலந்துகொள்ளவில்லையா??- சென்னை அணியின் நிர்வாகி தகவல்

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (16:10 IST)
ஐபிஎல் ஏலத்தில் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கலந்துகொள்வாரா  என்ற கேள்விக்கு  அணியின் தலைமை நிர்வாகி பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – ஏப்ரல்  மாதங்களில் தொடங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்ய பல கோடிகள் கொடுத்துப் பெற்றுவருகின்றனர்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் முக்கிய வீரர்கள் மிக அதிகவிலைக்கு எடுத்துள்ளனர்.

அதன்படி, ஜாகர்  சாஹில் அல் ஹசனை ரூ.3.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

கிளென் மேக்ஸ்வெல்ல் ரூ. 14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு. கடந்தாண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் டெல்லி அணி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு எடுத்துள்ளது  .
இந்நிலையில், தோனி இந்த ஏலத்தில் கலந்துகொள்வாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து தற்போது சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளதாவது :

சென்னை கிங்ஸ் அணின் வீரர் ஸ்டீவன் பிளமிங் மற்றும் கேப்டன் தோனி ஆகிய இருவரும் இந்த ஏலத்தில் கலந்துகொள்ளமாட்டார்கள் எ எனவும், அவர்கள் டிஜிட்ட; ஊடகம் மூலம்  ஏலத்தில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இவரும் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள வரவில்லை..தற்போது உள்ளா டிஜிட்டர் வசதிகள் மூலமாக அவர்கள் எங்களும் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றதுடன் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்