பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி கேரளாவிற்கு வருவது உறுதியாகியுள்ளது
இந்தியா முழுவதுமே ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருந்தாலும், கால்பந்து என்றால் அதற்கு ரசிகப்பட்டாளமே கேரளாதான். பிஃபா கால்பந்து நடக்கும்போதெல்லாம் கேரளாவில் திருவிழாதான். அப்படியாக கேரளாவில் மெஸ்ஸி, ரொனால்டோ என கால்பந்து ஜாம்பவான்களுக்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் வரும் நவம்பரில் அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும் கேரளா வருவது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கேரளாவுமே மெஸ்ஸியை வரவேற்க கோலாகலமாக தயாராகி வருகிறது.
Edit by Prasanth.K