இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு கூட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி தேர்வு எப்படி நடக்கிறது என்பதை ரசிகர்கள் அறியும் வகையில் இந்த நடவடிக்கை அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு காலத்தில் ஜெய்ஸ்வால் போன்ற திறமையான வீரரை டி20 போட்டிகளில் இருந்து விலக்கி வைக்க முடியாது என்று கம்பீர் கூறியிருந்தார். ஆனால், தற்போது ஜெய்ஸ்வாலுக்கு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதை மனோஜ் திவாரி சுட்டி காட்டியுள்ளார்.
இதனால் தான் தேர்வு குழுவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறியும் வகையில் தேர்வுக்குழு கூட்டம் நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும். அப்போதுதான், எந்த வீரர் ஏன் தேர்வு செய்யப்பட்டார் அல்லது ஏன் நீக்கப்பட்டார் என்பது மக்களுக்கு தெரியவரும்" என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.