உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அடுத்து பாகிஸ்தானோடு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறது. இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட் டது. அதில் இடம்பெற்றுள்ள ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்த தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்க உள்ளார்.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான வார்னர் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்துள்ளார். உஸ்மான் கவாஜா 29 ரன்கள் சேர்த்துள்ளார்.