ஆனால் அணியின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை, சாம் கரணின் அதிரடியால் 190 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் அணியின் சாஹல் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்களை வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.