சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது . இந்த ஆட்டத்தில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்து வீச்சை செய்யத் தீர்மானித்துள்ளார்.
சிஎஸ்கே அணி:
ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் கர்ரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம். எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்லீஷ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலையில் 10-வது இடத்தில் நிலைகொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தங்களது இடத்தை மேம்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.