நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாறுதல்களை செய்த போதும் பேட்டிங்கில் அது எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. வழக்கமாக பஞ்சாப் அணி சென்னை அணிக்கு எதிராகத் தொடர்ந்து தோல்விகளையேப் பெற்று வந்துள்ளது. ஆனால் இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இன்றையப் போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது சென்னை அணி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.