கோலி, ரோஹித்துக்கு டி 20 கிரிக்கெட்டில் எதிர்காலம் இருக்கா? -தேர்வுக்குழு தலைவரின் பதில்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (09:21 IST)
சமீபத்தில் உலகக்கோப்பைக்கு பின்னர் இந்திய அணி விளையாட உள்ள தொடர்களுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டன.

இந்திய அணி தற்போது உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. கோலி  மிகச்சிறப்பாக வரும் நிலையில் ரோஹித் ஷர்மா அணியை வழிநடத்துகிறார். இவர்கள் இருவருக்கும் முறையே 34 மற்றும் 35 வயது ஆகிறது. இதனால் இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி சமீபத்தில் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அவர் “அவர்கள் மிகப்பெரிய வீரர்கள். இப்போது உலகக்கோப்பை நடந்து வரும் நிலையில் பாதியில் நான் யாரைப் பற்றியும் பேச முடியாது. அவர்களிடம் இருந்து இளைஞர்கள் அதிகமாகக் கற்றுக் கொள்கிறார்கள். யாருக்கும் அணியின் கதவுகள் மூடாது. தொடர்ந்து ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் மூத்த வீரர்களை அணியில் எடுப்பது  மகிழ்ச்சிதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்