உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பெரிய அணிகள் அணி 1ல் விளையாடி வரும் நிலையில், இந்தியா பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 அணிகள் அணி 2ல் விளையாடி வருகின்றன.
கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி அடைந்ததால் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்து, இந்தியாவை இரண்டாவது இடத்தில் தள்ளியுள்ளது. இந்தியாவும், வங்கதேச அணியும் 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வி என்ற நிலையில் 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளன.
நாளைய போட்டிக் குறித்து பேசியுள்ள வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் “அனைத்து போட்டிகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அவர்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக வந்துள்ளனர். நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. இந்தியா எங்களிடம் தோல்வியடைந்தால் நாங்கள் வருந்துவோம். ஆனால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை அப்செட் ஆக்கவும் முயற்சி செய்வோம்.
அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிகள் கூட இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ளன. எங்களுக்கும் அப்படியான வாய்ப்பு அமையலாம்” என்று தெரிவித்துள்ளார்.