IPL 2020 -மும்பை இந்தியன்ஸ் அணியை சிதறடித்து ’’சென்னை கிங்ஸ் சூப்பர் வெற்றி ’’!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (23:26 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

13 வது ஐபிஎல் –ல் சென்னை சூப்பர் சிங்கங்களும், மும்பை இந்தியன்ஸ் சிறுத்தைகளும் இடையேயான முதல்போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு ஆரம்பித்தது.

இதையடுத்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பமே அசத்தலானதால் சென்னை கிங்ஸ் அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

 
சென்னை அணி : மகேந்திர சிங் தோனி, முரளி விஜய், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, பாப் டூ பிளெஸிஸ், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, தீபக் சஹார் , லுங்கி நிகிடி, சாம் கர்ரன் ஆகியோர் இடம்பிடித்தனர்.

மும்பை அணி : ரோகித் சர்மா, டி-காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, குர்னால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ஜேம்ஸ் பேட்டின்சன், ராகுல் சாஹர், போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பிடித்தனர்.

இந்நிலையில், கடும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிறகு 163 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், டுபிஸில் பவுண்டரி எல்லையில் அடுத்தடுத்து இரண்டு அபாரமான கேட்ஸ்களை பிடித்தது வைரலாகி வருகிறது. இதையடுத்து, இன்னொரு முக்கிய சாதனையை தோனி நிகழ்த்தினார்.

அதாவது மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோனி தனது 1000 வது கேட்ஸ் பிடித்து சாதனைப் படைத்தார்.

 கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில், 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி பெற்றது. ஆனால் தல தோனி ரன்கள் எதுவும் இன்றி முதல் பாலிலேயே அவுட் ஆனார். பின்னர் ரிவியூ வேண்டுமென தோனி கேட்கவே  டிஆர் எஸ் காண்பிக்கப்பட்டது,. அதில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெரிந்ததால் சென்னையின் தல மீண்டும் களத்தில் நின்றார். வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்