இதனால் இந்த போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக்க பல புதிய விதிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகக் கொண்டுவரப்பட்ட இம்பேக்ட் ப்ளேயர் விதி ஆதரவுகளையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது. அதே போல கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு விதி தற்போது தளர்வுப்படுத்தப்படுகிறது.
போட்டியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவேண்டும் என்பதற்காக மெதுவாக பந்துவீசும் அணியின் கேப்டனுக்கு (மூன்று முறை) ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஹர்திக் பாண்ட்யா சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த விதியைத் தளர்த்தி மெதுவாகப் பந்துவீசும் அணிக்கு புள்ளிப்பட்டியலில் புள்ளிக்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.