தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் தேர்வுக்குழு… மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?

vinoth
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (12:10 IST)
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும்,  இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பௌலர் பும்ரா 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, மூன்றாவது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அவர் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணியில் இணையலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்