தோத்தாலும் மரண மாஸ்தான்! 100 அடித்ததை டைவ் அடித்துக் கொண்டாடிய ரிஷப் பண்ட்! - வைரலாகும் வீடியோ!

Prasanth Karthick

புதன், 28 மே 2025 (08:40 IST)

நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் செஞ்சுரி அடித்ததை கொண்டாடிய வீடியோ தீயாய் வைரலாகி வருகிறது.

 

நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியாக நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் போட்டி நடந்தது. ஏற்கனவே லக்னோ அணி ப்ளே ஆப் தகுதியை இழந்துவிட்ட போதிலும் நேற்று சிறப்பாகவே விளையாடியது.

 

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது. இதில் அணி கேப்டன் ரிஷப் பண்ட் மட்டுமே தனியாக 118 ரன்களை குவித்தார். பின்னர் சேஸிங்கில் இறங்கிய ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை 18.4 ஓவர்களிலேயே ஈட்டி ஆட்டத்தை முடித்தது.

 

இந்த போட்டியில் லக்னோ அணி தோற்றிருந்தாலும், ரிஷப் பண்டின் அட்டகாசமான ஆட்டம் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது, இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய லக்னோ அணி 6 போட்டிகளிலேயே வென்றிருக்கிறது. ஆரம்பம் முதலே ரிஷப் பண்டின் விளையாட்டும் மோசமாக இருந்தது. ஆனால் கடந்த சில போட்டிகளில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடியுள்ளார்.

 

இந்த போட்டியில் அவர் 100 அடித்ததும் க்ளவுஸை கழற்றிவிட்டு மைதானத்திலேயே ப்ளிப் டைவ் அடித்து அதை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. முதல் 10 போட்டிகளில் மொத்தமாகவே 49 ரன்களை மட்டுமே அடித்திருந்த ரிஷப் பண்ட், கடைசி 3 போட்டிகளில் மட்டும் 193 ரன்களை குவித்துள்ளார். இந்த 3 போட்டிகளையும் காண லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

Intersting Fact ???? ????..

When Sanjiv Goneka present in stadium :- Rishabh pant :- 10 match 49 run

When Sanjiv Goneka not present in stadium :- Rishabh pant :- 3 match 193 run#LSGvRCB | #Rishabpant pic.twitter.com/YdJaQTw4V2

— Harsh 17 (@harsh03443) May 27, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்