ஐபிஎல் இறுதி போட்டியில் கெளரவிக்கப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்கள்.. விரிவான ஏற்பாடு..!

Siva

புதன், 28 மே 2025 (09:34 IST)
2025ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில், ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள் கலந்து கொண்ட ராணுவ வீரர்களை கௌரவிக்கும் திட்டம் பி.சி.சி.ஐ. செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
 
ஐபிஎல் இறுதிப்போட்டி நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெறும் நிலையில், அன்றைய தினம் பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் திரளும் வகையில், நாட்டின் ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
 
இந்திய பாதுகாப்பு துறையின் உயர்மட்ட அதிகாரிகளான பாதுகாப்புத் துறை தலைவர், தரைப்படை தலைவர், கப்பற்படை தலைவர் மற்றும் விமானப்படை தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இறுதிப் போட்டி தொடங்கும் முன்னர் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறும் என்றும் பி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தானின் பிஎஸ்எல் முற்றிலும் தோல்வியடைந்த நிலையில், ஐபிஎல் மட்டுமே மிகப்பெரிய அளவில் இரு நாடுகளின் பதட்டத்திற்கு இடையே வெற்றிகரமாக நடந்து வருகிறது என்பதும், அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்