அடிலெய்ட் டெஸ்ட் தொடரில் பேட் கம்மின்ஸ் நீக்கம்! – ஆஸ்திரேலியா அதிரடி முடிவு!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (08:58 IST)
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடரில் பேட் கம்மின்ஸ் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான பிரபலமான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்போனில் நடந்த முதல் டெஸ்டில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து இன்று அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புடைய நபரோடு தொடர்பில் இருந்ததால் பேட் கம்மின்ஸ் இரண்டாவது டெஸ்டில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஹெசில்வுட்டும் போட்டியில் விலகியுள்ளார். இதனால் இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்