கோலியை முந்தி பாபர் ஆசாம் படைத்த முக்கிய சாதனை!

vinoth

வெள்ளி, 7 ஜூன் 2024 (08:08 IST)
உலக கோப்பை டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை புதிதாக கிரிக்கெட் விளையாட்டிற்குள் நுழைந்த அமெரிக்கா சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆமைவேகத்தில் விளையாடியதுதான் தோல்விக்குக் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 43 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். அவரின் இந்த இன்னிங்ஸ் கடுமையான ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளது.

இந்த போட்டியைத் தோற்றாலும் பாபர் டி 20 போட்டிகளில் ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார். அவர் டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். பாபர் ஆசம் 4067 ரன்கள் சேர்த்து முதலிடத்துக்கு செல்ல கோலி 4038 ரன்களோடு இரண்டாமிடத்தில் இருக்கிறார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் ஷர்மா இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்