உலகக்கோப்பை டி20: பாகிஸ்தான் அணியை பந்தாடிய அமெரிக்கா.. சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி..!

Siva

வெள்ளி, 7 ஜூன் 2024 (07:38 IST)
உலக கோப்பை டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை புதிதாக கிரிக்கெட் விளையாட்டிற்குள் நுழைந்த அமெரிக்கா சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்ட நிலையில் சூப்பர் ஓவரில் அமெரிக்கா பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. கிரிக்கெட் விளையாட்டில்  சர்வதேச போட்டிகளில் அமெரிக்கா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளதை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குரூப் ஏ பிரிவில் நான்கு புள்ளிகள் உடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பதும் இந்தியாவை அந்த அணி பின்னுக்கு தள்ளி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்