சூப்பர் ஓவர் போய் அடித்து ஜெயித்த நமீபியா! – உலக கோப்பை டி20 போட்டியில் சுவாரஸ்யம்!

Prasanth Karthick

திங்கள், 3 ஜூன் 2024 (10:17 IST)
நடந்து வரும் உலக கோப்பை டி20 போட்டியில் இன்று ஓமன் – நமீபியா அணிகள் மோதிக் கொண்ட நிலையில் சூப்பர் ஓவர் வரை சென்று நமீபியா அணி வெற்றி பெற்றுள்ளது.



உலக கோப்பை டி20 லீக் போட்டிகள் அமெரிக்காவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளின் இன்று ஓமன் – நமீபியா அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை எடுத்தது.

ALSO READ: இந்திய ரசிகர்கள் எனக்குத் தொல்லை தருவார்கள்… பாட் கம்மின்ஸ் புலம்பல்!

பின்னர் சேஸிங்கில் இறங்கிய நமீபியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எடுத்தது. இரு அணிகளுமே ஒரே ஸ்கோரில் இருந்ததால் சூப்பர் ஓவர் போட்டி வைக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என அடித்து 21 ரன்களை குவித்தது. ஓமன் அணி சூப்பர் ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் உலக கோப்பையில் முதல் வெற்றியை அடைந்துள்ளது நமீபியா அணி.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்